Sunday, 20 January 2013

சோனாக்ஷி அதிரடி டான்ஸ்: அலறுகிறார் தமன்னா

Reactions: 


இலியானாவை தொடர்ந்து, தமன்னாவும், கோடம்பாக்கத்திலிருந்து, பாலிவுட்டுக்கு படையெடுத்துச் சென்று விட்டார். சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீதேவி நடித்து, பாலிவுட்டில் ஹிட்டான, "ஹிம்மத்வாலா என்ற படத்தின், "ரீ-மேக்கில், தமன்னா, ஹீரோயினாக நடிக்கிறார்.இந்தியில் நடிப்பதால், உற்சாகமாக இருப்பார் என்று பார்த்தால், சோகத்துடன் தான், காட்சியளிக்கிறார், தமன்னா. இதுகுறித்து பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, உண்மை தெரிந்தது. இந்த படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு, சோனாக்ஷி சின்கா, அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறார். படம் வெளியானதும், இந்த பாடல் காட்சிக்கு, ரசிகர்களிடம் பெரும் பாராட்டு கிடைக்கும் என, இப்போதே பேச்சு எழுந்துள்ளது. இதனால், படத்தின் ஹீரோயினான, தன்னை விட, ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் சோனக்ஷிக்கு, அதிக புகழ் கிடைத்து விடுமோ என்ற, கலக்கத்தில் இருக்கிறாராம், தமன்னா. படம் வெளியான பின் தான், ஹீரோயினுக்கு பாராட்டு கிடைக்குமா, குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்ட, சோனாக்ஷிக்கு பாராட்டு கிடைக்குமா என்பது தெரிய வரும். அதுவரை, தமன்னாவுக்கு, திக்...திக்...! 

1 comment: